Friday, 6 December 2013

பயன்மிக்க சித்த மருத்துவக் குறிப்புகள்

ஆண்மைக் குறைவு நீங்க : தினசரி இரவு படுக்கைக்குச் செல்லும் மூன்று மணி நேரத்திற்கு முன் ஒரு மாதுளம் பழம் முழுவதும் சாப்பிட்டு வர ஆண்மைக் குறைவு நீங்கும்.

நரம்புத் தளர்ச்சி நீங்க : அடிக்கடி மாம்பழத்தைச் சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி நீங்கும்
.
கருவுற்றிருக்கும் தாய்ய்ய்ய்மார்களுக்கு : கருவுற்றிருக்கும் தாய்மார்கள் மாம்பழத்தைச் சாப்பிட்டு வர, பிறக்கும் குழந்தை ஊட்டத்துடன் இருக்கும். உடல் பலவீனம், கை கால் நடுக்கம், மயக்கம் முதலிய தொல்லைகள் வராது.

மலச்சிக்கல் தீர : மலச்சிக்கலில் சிரமப்படுவோர் இரவில் மாம்பழத்தைச் சாப்பிட்டுவர, மலச்சிக்கல் சரியாகும்.

பற்களும் ஈறுகளும் உறுதியடைய : நெல்லிக்கனியைப் பற்களிளால் நன்றாக மென்று தின்று வர பற்களும் ஈறுகளும் உறுதியாகும்.

இரத்த கொதிப்பு குணமாக : 
இரத்த கொதிப்பு நோய் கொண்டவர்கள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் அகத்திக் கீரையைச் சமைத்துச் சாப்பிட்டு வர, இரத்தக் கொதிப்பு நோய் குணமாகும்.

உடல் எடையைப் பராமரிக்க உதவும் தக்காளி

தக்காளியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும் என்று அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

தக்காளியில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. அதனை தொடர்ந்து சாப்பிடுவது இதயத்துக்கு நல்லது. உடலில் கொழுப்பு சேராமல் பாதுகாக்க உதவும் என்பதெல்லாம் ஏற்கெனவே அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

தற்போது தக்காளியை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதால் உடல் எடை அதிகரிக்காமல் ஒரே அளவில் பராமரிக்க முடியும் என்று பிரிட்டன் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

பசியைத் துண்டும் ஹார்மோன்களின் செயல்பாடுகளை தக்காளி கட்டுப்படுத்துகிறது. இதனால் அதிக அளவு சாப்பிடுவது தடுக்கப்பட்டு உடல் எடை அதிகரிக்காமல் கட்டுக்குள் இருக்கிறது.

சராசரி எடை கொண்ட 18 வயது முதல் 35 வயதுக்குள்பட்ட பெண்கள் இதற்கான ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களில் ஒரு பிரிவினருக்கு சான்ட்விச்களுடன் தக்காளி வழங்கப்பட்டது. மற்றொரு பிரிவினருக்கு சான்டவிச்சுடன் கேரட் வழங்கப்பட்டது. இதில் தக்காளி சாப்பிட்டு வந்தவர்கள் குறைவாகவே உணவு சாப்பிட்டனர்.

இது குறித்து ஆய்வாளர் டாக்டர் ஜூலி லவ்குரோவ் கூறுகையில், “இது சிறிய அளவில் நடத்தப்பட்ட ஆய்வுதான் என்றாலும் முடிவு திருப்திகரமானதாக உள்ளது. தக்காளி சாப்பிடுவது பசி உணர்வைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கிறது என்பது முதல்கட்டமாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக தொடர்ந்து ஆய்வு நடத்தவுள்ளோம்’ என்றார்.

Tuesday, 3 December 2013

ரோஜாப்பூ


இந்த மலரின் மணம் மனதிற்கு மட்டுமின்றி, இருதயத்திற்கும் வலிமை தரக்கூடியது. பாலில் ரோஜா இதழ்களை தூவி குடித்து வந்தால் நெஞ்சில் இருக்கும் சளி நீங்கும். இரத்த விருத்திக்கும் துணை செய்யும் மலர் இது. 

செம்பருத்திப்பூ



உடலுக்கு குளிர்ச்சி, இதனுடன் விழுதி இலை, வாத நாராயணா இலை சேர்த்து கசாயம் வைத்து இரவில் சாப்பிட காலையில் சுகபேதி உண்டாகும். மலச் சிக்கலுக்கும் இது உகந்தது. 

செம்பருத்திப்பூ



உடலுக்கு குளிர்ச்சி, இதனுடன் விழுதி இலை, வாத நாராயணா இலை சேர்த்து கசாயம் வைத்து இரவில் சாப்பிட காலையில் சுகபேதி உண்டாகும். மலச் சிக்கலுக்கும் இது உகந்தது. 

தாழம்பூ

இந்தப் பூவை தலையில் சூடிக்கொண்டால் பேன் மற்றும் வேறு எந்தக் கிருமிகளும் நெருங்காது. இதுதவிர இருதயத்திற்கு வலிமையூட்டி உடலுக்கு வனப்பையும் அதிகரிக்கும். 

மகிழம்பூ



மகிழம்பூவின் மணம் கண்நோய், தலைவலி, தலைப்பாரம் போன்ற நோய்கள் நீக்கிவிடும்