Tuesday, 3 December 2013

அவரைக்காய் - பயத்தங்காய்

அவரைக்காய்

அவரைக்காயில் பல வகைகள் உண்டு. வெள்ளை அவரைப் பிஞ்சை நோயாளிகள் உண்ணும் காலத்தில் பத்திய உணவாக உட்கொள்ளலாம்.
இதைச் சமைத்து சாப்பிட்டால் உடலை உரமாக்கும். காம உணர்ச்சியைப் பெருக்கும். சூட்டுடம்புக்கு இது மிகவும் ஏற்ற காய் ஆகும்.

ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இதைத் தாராளமாகச் சாப்பிடலாம். அவர்களுக்கு மிகவும் நல்லது.

பயத்தங்காய்

இது நல்ல உணவுப் பொருள். இதனுடைய சுபாவம் குளிர்ச்சி ஆகும். இந்தக் காய் பசியைத் தூண்டி நீரைப் பெருக்கும். கபத்தை அகற்றும். காற்றை நீக்கும்.

இதைப் பருப்புடன் சேர்த்து கூட்டு செய்தோ, கறி செய்தோ சாப்பிடலாம். சுவையாக இருக்கும். சற்று பிஞ்ஞாக சமைப்பதே நலம். 
ஆனால் ஒரு கண்டிஷன். இந்தக் காயை மருந்து உண்ணும் காலங்களில் கண்டிப்பாக சாப்பிட வேண்டாம்.

No comments:

Post a Comment